Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Aug 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8386

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகமாக உள்ளது. தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித் திரிவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும். -ச.சக்திவிக்னேஷ், தொளசம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8384

சிக்னல் விளக்குகள் சரிசெய்யப்படுமா?

மற்றவை

சேலம் இரும்பாலை ரோட்டில் புது ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து நான்கு சாலைகள் பிரிகிறது. இதனால் அங்கு சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. அந்த சிக்னல் விளக்குகள் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து சிக்னல் விளக்கை சரி செய்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8382

ஆய்வு செய்யலாமே!

ஆய்வு செய்யலாமே!மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் பிரதான சாலையில் ஒரு பெரிய பாறாங்கல் காணப்படுகிறது. அதில் சில சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் அது குறித்த விவரம் அந்த பகுதியினருக்கு தெரியாமல் உள்ளது. எனவே அந்த சிலைகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் வரலாற்றை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -ரவி, ஆர்.பி.புதூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8381

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி வண்டிப்பேட்டை பகுதியில் இறந்தவர்களின் உடலை பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் செடி கொடிகளை அகற்ற வேண்டும். -சங்கரன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8380

புதிய குடிநீர் தொட்டி தேவை

புதிய குடிநீர் தொட்டி தேவைதண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பெரமாண்டம்பாளையம் ஊராட்சி ஒலைபட்டி நாயக்கர் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் தொட்டி விரிசல் விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டியில் கதவு உடைந்தும், தொட்டி மீது மரம் வளர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமான குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும். -நவலடி, பெரமாண்டம்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8361

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடி ஊராட்சி குண்டலகுட்டை, வி.கே.நகர், மரிமானப்பள்ளி வழியாக சிகரலபள்ளி ஊராட்சி, ஜிட்டீகனூர் வழியாக குட்டப்ப நாயக்கனூர் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவும், இரு சக்கர வாகனங்களில் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -மோகனபிரியா, மல்லப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8360

குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப்படுமா?

தண்ணீர்

கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாததால் தொட்டியில் பாசி வளர்ந்து சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீரைத்தான் மாணவ-மாணவிகள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து பராமரித்து நல்ல குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8359

சாலையோரம் குப்பை கழிவுகள்

குப்பை

ஓசூர் தேர்பேட்டையில் அரசு ஊழியர் குடியிருப்பு பின்பகுதியில் இருந்து சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இதனை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை முன் வருவார்களா?. -மஞ்சுநாதன், தேர்பேட்டை, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8357

நோய் பரவும் அபாயம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தது. அதை பேரூராட்சி நிர்வாகம் அகற்றாமல் அப்படியே விட்டுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இறந்த தெருநாயை அகற்ற வேண்டும். -பச்சமுத்து, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8356

காணாமல்போன தண்ணீர் தொட்டி

காணாமல்போன தண்ணீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மெயின் ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதில் அந்த பகுதி ெபாதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். அங்கிருந்த தண்ணீர் தொட்டி திடீரென காணாமல் போனது. இதனால் அந்த பகுதி ெபாதுமக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். -ஆனந்த், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8355

வாகனங்களால் மாணவர்கள் அவதி

வாகனங்களால் மாணவர்கள் அவதிபோக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் நான்கு ரோடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி நுழைவு வாயில் முன்பு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். அந்த வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8354

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா இருமத்தூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் கோழிக்கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்த், இருமத்தூா், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick