Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Aug 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8584

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பகுதியில் சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதி சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அருகில் பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அந்த பள்ளத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்தன. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். அந்த பள்ளத்தில் மண் போட்டு மூடினர். இதனால் அந்த பள்ளம் சரி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8582

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஹள்ளி ஊராட்சி பூர்காலன்கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விவசாயிகள் வாகன ஓட்டிகள் என தினந்தோறும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும். - கண்ணன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8581

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி எச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் தெருக்களில் நடக்க முடியாதபடி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். -சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8580

பராமரிப்பு இல்லாத சாலை

சாலை

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சத்தல பள்ளி, கொல்லப்பட்டி, குறும்பர் தெரு, வழியாக கந்திகுப்பம் வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8579

சிக்னல் விளக்கு வேண்டும்

மின்சாரம்

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு, சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்ற இடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியை கடந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இங்கு சிக்னல் விளக்குகள் இல்லை. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அந்த பகுதியில் சிக்னல் விளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8576

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்தகொண்டபள்ளியில் உள்ள ஏரியின் கரையோரம் முட்புதர்கள் வளர்ந்து கிடக்கிறது. அங்கு குப்பைகளும் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் ஏரியை சுத்தப்படுத்தி சுற்றுபுறச்சூழலை பாதுகாக்க வேண்டும்.. -விஸ்வநாதன், ஒசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8572

எரியாத மின்விளக்குகள்

எரியாத மின்விளக்குகள்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் லளிகம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மிட்டாரெட்டிஅள்ளிக்கு செல்லும் சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதாகி பல மாதங்களாக எரியாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த உயர் கோபுர மின் விளக்கை எரிய செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8568

ஆபத்தான மரம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி நெடுஞ்சாலையில் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் புளியமரம் உள்ளது. இதன் அடிபாகம் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. இது எந்த நேரமும் சாலையில் விழும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் காற்று வேகமாக அடிக்கும் போது சாலையில் செல்லும் வாகனங்கள் மீது அல்லது சாலையில் விழுந்தோ விபத்து ஏற்படக்கூடும் எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த மரத்தை அகற்ற வேண்டும். -ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8565

தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி காந்தி நகரில் உள்ள பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் கருவூல அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் இந்த குப்பைகளால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ரவிக்குமார், காந்திநகர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8399

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு பணிகளுக்காகவும், கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காகவும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஓசூர்- சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பஸ்களில் வரக்கூடிய மக்கள் சிறிது தூரம் இறங்கி நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் சில பஸ்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே நிற்காமல் மேம்பாலத்தில் இறக்கி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கலெக்டர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8389

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

சேலம் செட்டிச்சாவடி முனியப்பன் கோவில் அருகே உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பொதுமக்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி முனியப்பன் கோவில் எதிரில் சாலையில் இரண்டு வேகத்தடைகள் அமைக்க வேண்டும். -சீனிவாசன், செட்டிச்சாவடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8388

அதிகாரிகள் கவனிப்பார்களா?

அதிகாரிகள் கவனிப்பார்களா?தண்ணீர்

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பெரியார் வளைவு அருகில் சங்ககிரி மெயின் ரோட்டில் ஜெகதீசன் செட்டிகாடு தெருவுக்கு செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. அந்த பாலத்தில் கான்கிரீட் அமைக்க ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. ஆனாலும் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் அந்த தெருவுக்கு செல்லும் பெயர் பலகை சாய்ந்த நிலையில் அதனை சுற்றி ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவகுமார், தாதகாப்பட்டி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick