Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Aug 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9882

நூலகங்கள் புதுப்பிக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், இளைஞர்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சில நூலகங்களின் கட்டிடங்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகுகிறது. இதனால் புத்தகங்கள் மழைநீரில் சேதமடைந்து பயன்படாமல் வீணாகிறது. அதன் காரணமாக நூலகத்தை பூட்டியே கிடக்கின்றன. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடங்களை புதுப்பிக்க முன் வர வேண்டும். -அன்பழகன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9880

ஆக்கிரமிக்கப்பட்ட நஞ்சையன் ஏரி

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நஞ்சையன் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பி 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மழை பெய்தும், அந்த ஏரிக்கு மழைநீர் வருவதில்லை. மழைநீர் கால்வாய்களை சிலர் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள். மேலும் கால்வாய்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. கால்வாய் மற்றும் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்பை அகற்றினால் சுமார் 400 ஏக்கர் நிலம் பாசன வசதி கிடைக்கும். எனவே விவசாயிகளின் நலன்கருதி ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி பாசன வசதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9877

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டலாமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டத்தில் காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் 3 அல்லது 4 பேர் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்ட தடை விதிக்க வேண்டும். -ராமலிங்கம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9873

பராமரிக்க வேண்டிய அரசு கட்டிடம்

பராமரிக்க வேண்டிய அரசு கட்டிடம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் மண்டி பயனற்று கிடக்கிறது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே அங்குள்ள முட்புதர்களை அகற்றி அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -பன்னீர்செல்வம், இண்டூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9871

புதருக்குள் தண்ணீர் தொட்டி

புதருக்குள் தண்ணீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டில் பஞ்சப்பள்ளி சாலையில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கும் இடத்தில் தண்ணீர் தொட்டி உள்ளது. இதனால் சுகாதாரமின்றி இருக்கும் தொட்டியில் தண்ணீர் பிடிக்க மக்கள் முகம் சுழிக்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி புதர்களை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -சுரேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9869

டவுன்பஸ் நிலையத்தில் சுகாதார கேடு

கழிவுநீர்

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கிறார்கள். பஸ்கள் நிற்கும் இடத்தில் அதிக அளவில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. கழிவுநீரும் சில இட ங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. டவுன் பஸ் நிலையத்தில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9696

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி எஸ். நாட்டாமங்கலத்தில் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டபோது சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் மண் சரிந்து நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் மழைநீர் சாக்கடை கால்வாயில் செல்லாமல் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -திவாகர், நாட்டாமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9695

தார்சாலை புதுப்பிக்கப்படுமா?

தார்சாலை புதுப்பிக்கப்படுமா?சாலை

சேலம் பங்களாதெருவில் கணபதி அய்யர் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்லும் போதும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலையை புதுப்பிக்க வேண்டும். -கணேஷ், பங்களாதெரு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9694

மழைநீர் செல்ல வடிகால் வசதி

தண்ணீர்

சேலம் மாவட்டம் பெரிய கொண்டலாம்பட்டி ரெயில்வே பாலம் பகுதியிலுள்ள வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. வடிகால் வசதி இல்லாததால் கடந்த ஒரு மாதகாலமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மழைநீரை அகற்றி, மேலும் மழைநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரேகன், பெரிய கொண்டலாம்பட்டி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9693

தண்ணீர் வசதி இல்லாத கழிப்பிடம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 69-வது வார்டில் பொது கழிப்பிடம் உள்ளது. இங்கு தண்ணீர் வசதி இல்லாததால் பல நாட்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். பொதுகழிப்பிடம் அருகில் 2 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 2 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அமைந்துள்ளன. எனவே பொது கழிப்பிடத்தை சீரமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகனவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9691

மூடப்படாத கழிவுநீர் குழி

மூடப்படாத கழிவுநீர் குழிகழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வீசாணம் கிராமத்தில் உள்ள நூலகத்தில் கழிவுநீர் தேக்க தொட்டி குழி தோண்டப்பட்டு மூடாமல் உள்ளது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக இதே நிலையில் தான் உள்ளது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், குழந்தைகள் அந்த குழியில் விழும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தான கழிவுநீர் தொட்டியை மூடி வைக்குமாறு வீசாணம் ஊராட்சிமன்ற தலைவரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மூடினால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். -ராமு, வீசாணம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9689

சேதமடைந்த சாலையால் விபத்து

சேதமடைந்த சாலையால் விபத்துசாலை

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலை திருமலைப்பட்டி பிரிவு பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் சேதமாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக 3 பகுதிகளில் இருந்து வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும்போது தடுமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே விபத்துகள் நடக்கும் முன்பு வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதம் அடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick