Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Aug 2022 5:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10103

தார் சாலை அமைக்க கோரிக்கை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செல்லியம்பட்டி ஊராட்சி கூடக்காரன்கொட்டாய் கிராம பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் கோவில் முதல் முத்துமாரியம்மன் கோவில் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற பல முறை கோரிக்கை விடுத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10100

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையோரம் மத்திய கலால் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே தற்போது மாநகராட்சி சார்பில் பூங்கா, குறுங்காடு அமைக்கும் பணிக்காக சாலையை ஆக்கிரமித்து இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் சாலை குறுகி உள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையின் அகலம் குறையாமல் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரவிந்த், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10099

சேறும், சகதியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மோர்னப்பள்ளி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை மண் சாலையாக உள்ளது. இந்த சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவசர காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். -ஊர்பொதுமக்கள், மோரனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10098

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

பர்கூர் துரைஸ் நகர் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9890

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் செவ்வாய்பேட்டை தேவாங்கபுரம் மரக்கடை வீதி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் தெருநாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி செல்கிறது. நடந்து செல்லும் குழந்தைகளையும் கடித்துவிடுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அருள், செவ்வாய்பேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9889

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?தண்ணீர்

சேலம் மாநகராட்சி 19-வது வார்டு சூரமங்கலம், ஜலால் தெருவில் சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பாக மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதன்மூலம் அந்த பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்மோட்டார் இயங்காமல் பழுதடைந்து உள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த தொட்டி அருகிலேயே குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்து மீண்டும் தண்ணீர் வினியோகம் செய்யவும், அந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9888

எரியாத தெருவிளக்கு

மின்சாரம்

சேலம் தாசநாயக்கன்பட்டி பெட்ரோல் நிலையம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருவிளக்கை எரிய செய்ய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வராசு, தாசநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9887

அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

சேலம் உயிரியல் பூங்கா ரோடு பிருந்தாவன் கார்டன் என்.எஸ்.கே. பள்ளியின் பின்புறம் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் வெளியே வர குழந்தைகள், பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது. இதனால் மக்கள் குடிநீரை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். -ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9886

பாலம் பணிகளால் மாணவர்கள் அவதி

சாலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் கோம்புபள்ளம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பாலம் பகுதியில் பாதுகாப்பான சிறுவழி பாதை தற்காலிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், குமாரபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 13
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9885

அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் பாதை உள்ளது. அந்த வழியில் உள்ள வெண்டாங்கி கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள தார்சாலையில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டு சாலை சேதம் அடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், வெண்டாங்கி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9884

சாலை, சாக்கடை கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசகுப்பம் கிராமத்தில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதிகளில் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவபிரகாசம், அரசகுப்பம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9883

தெருவிளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- காரகுப்பம் சாலையில் பொதுமக்கள் அதிகாலை வேளையில் நடைபயிற்சி செல்கின்றனர். அந்த சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. அங்கு தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழந்து காணப்படுகிறது. எனவே சாலை ஓரங்களில் உள்ள புதர்களை அகற்றி தெருவிளக்கு அமைத்து எரிய செய்யதால் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். -செல்வராசு, காரகுப்பம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick