Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Aug 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10311

உடைந்த நீர்தேக்கதொட்டியின் மூடி

உடைந்த நீர்தேக்கதொட்டியின் மூடிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியின் மேல்மூடி உடைந்து பல மாதங்களாக கிடப்பதால், கிராம மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரில் பறவைகள் எச்சம் மற்றும் மழைநீரும் கலந்து வருகிறது. இ்ந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். எனவே குடிநீர் தொட்டிக்கு புதிய மூடியை அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்த், பச்சியப்பன்கொட்டாய்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10310

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியை மையமாக கொண்ட 4 ரோடு பகுதி குறுகிய சாலை என்பதால் சாலையின் இருபுறம் வாகனங்கள் வந்து செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி 4 ரோடு பகுதியை ஒரு வழிச்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -்ஞானவேலன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10309

சுகாதார கேடு

சுகாதார கேடுகுப்பை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அம்பேத்கர் சிலை கூட்ரோடு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து பென்னாகரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வாங்குகின்றனர். இந்த குப்பைகளை சாலையோரம் உள்ள குப்பைதொட்டியில் போட்டு குப்பை தொட்டியோடு சேர்த்து சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் குப்பை தொட்டியும் சேர்ந்து எரிந்து சேதமடைகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை எரிக்காமல் எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 6:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10119

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மாதா கோவில் தெருவில் நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. நாய்கள் இந்த தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்போர் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 6:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10118

ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து வட்டமுத்தாம்பட்டி புது காலனி 1,2 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் தூண்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எந்த நேரமும் தண்ணீர் தொட்டி பகுதியில் நடமாடுகின்றனர். அருகில் பொதுமக்களின் குடியிருப்பும் உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10116

நோய் பரவும் அபாயம்

நோய் பரவும் அபாயம்குப்பை

சேலம் அஸ்தம்பட்டியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் பின்புறம் வடிகால் மற்றும் ஏராளமான கழிவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு கொசு மற்றும் பூச்சிகள் அதிகளவில் உள்ளன. இதனால் தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை சுத்தம் செய்ய வேண்டும். -ரகிமுல்லா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10115

மண்ணில் புதைந்த அடிகுழாய்

மண்ணில் புதைந்த அடிகுழாய்தண்ணீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா சாமிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி அருகே கடந்த 3 ஆண்டுகளாக ஆழ்துளை தண்ணீர் குழாய் (அடிபம்பு) பழுதாகி, மண்ணில் புதைந்து கிடக்கிறது. இதனை சரி செய்ய கோரி சாமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை உடனே சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -ரமேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10114

தார்சாலை வசதி வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பைல்நாடு ஊராட்சிக்குட்பட்ட செங்காடு புதூர் கிராமத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல மண் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த மண் சாலையில் கற்கள் வெளியே தெரிந்தும், பள்ளம் ஏற்பட்டு காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் நிகழும் முன் செங்காடு புதூர் கிராமத்தில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில், செங்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10113

'தினத்தந்தி'க்கு பாராட்டு

போக்குவரத்து

நாமக்கல்லில் இருந்து தூசூர் வழியாக செல்லும் பஸ்கள் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது. பின் 2 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பஸ் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குருமம்பட்டி வழியாக வளையப்பட்டிக்கு மீண்டும் பஸ் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். புகார் குறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10109

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் ஏரியூர் வந்து செல்கின்றனர். இங்கு பிரதான சாலையோரம் உள்ள கடைகள் முன்பு இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூபதி, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10108

கழிவறை வசதி வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பஸ் நிலையம் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் கழிவறைகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் கழிவறைகள் அமைக்க வேண்டும்.மணி, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10105

பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் சில அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்கு செல்லாமல் 4 ரோடு பகுதியில் இருந்து அப்படியே திரும்பி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் வெளியூர் பயணிகள், முதியவர்கள், பொதுமக்கள், பஸ்சுக்காக வெகுநேரம் காத்து நிற்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick