Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Aug 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10329

பஸ் வசதி தேவை

போக்குவரத்து

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கோரணம்பட்டி வழியாக கொங்கணாபுரத்துக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ் வாழகுட்டை, தாதாபுரம், கோரணப்பட்டி, நாசனூர், மூலப்பாதை ஆகிய ஊர்களின் வழியாக கொங்கணாபுரம் சென்றடையும். தற்போது அந்த பஸ் 6 மாதங்களாக வருவதில்லை. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த வழித்தடத்தில் மீண்டும் டவுன் பஸ் இயக்க வேண்டும். -சுதா, கோரணம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10328

சுகாதாரமற்ற மீன்மார்க்கெட்

கழிவுநீர்

சேலம் சூரமங்கலம் அருகே தர்ம நகர் முதல் தெருவில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மீன்கழிவுகளை அகற்றாமல் ஆங்காங்கே சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் மீன்மார்க்கெட்டை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செந்தில், சூரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10327

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் 13-வது வார்டு சின்னத்திருப்பதி அண்ணா சாலை 6-வது தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் சாக்கடை நீரில் கலந்து வீணாகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -பெரியசாமி, சின்னத்திருப்பதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10326

சாக்கடை கால்வாய் வசதி தேவை

சாக்கடை கால்வாய் வசதி தேவைகழிவுநீர்

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பி.நாட்டாமங்கலம் 9-வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் சாக்கடை கால்வாய், சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவு நீர் சாலைகளில் ஓடு்வதால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாய் மற்றும் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -விஷ்வா, பனமரத்துபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10325

மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் அ.மேட்டுப்பட்டி கிராமத்திற்கு காலையில் 2 பஸ்களும், மாலையில் 3 பஸ்களும், இரவில் 3 பஸ்களும் வந்து கொண்டு இருந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ்கள் சரியாக வருவதில்லை. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வசந்தி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10324

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி பன்னாரி அம்மன் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். -சதீஷ்குமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10323

பாதியில் நிற்கும் கழிவுநீா் கால்வாய் பணி

பாதியில் நிற்கும் கழிவுநீா் கால்வாய் பணிகழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் 1 வருடமாகியும் பணி முடியாமல் உள்ளது. அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் பாதியில் நிற்கும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சந்தோஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10317

தெருநாய்களால் விபத்து

தெருநாய்களால் விபத்துமற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் தெருநாய்கள் திடீரென்று ஆங்காங்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும். மன்னாங்கட்டி, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10316

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ராஜீவ் நகர் 2-வது தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த தெருவில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். -அகிலா, பெத்ததாளப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10314

ஆபத்தான மரம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எலசேபள்ளி பிரிவு சாலையில் சாலையோரம் பழமையான மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் எந்த நேரத்திலும் முறிந்துவிழும் அபாயத்தில் காணப்படுகிறது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் முன், உடனடியாக அந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.வி.சீனிவாசன், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10313

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கத்திரிப்பள்ளி கிராமத்திலிருந்து நடுசாலை கிராமத்திற்கு செல்லும் தார்சாலை 3 கி.மீ. தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், கத்திரிப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10312

புதிய கழிப்பிடம் திறக்கப்படுமா?

புதிய கழிப்பிடம் திறக்கப்படுமா?மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பேளாரஅள்ளி பஞ்சாயத்தில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய கழிப்பிட சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுமார் 4 மாதங்கள் ஆகியும் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருமலை, சித்திரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick