Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Aug 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9684

சரிசெய்ய வேண்டிய தெருவிளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி நகரில் மின்கம்பங்களில் உள்ள சில தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் அந்த மின்கம்பத்தில் இருந்து வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கியபடி உள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் வாகனங்கள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் இதனை சாதகமாக பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின்வாரிய துறையினர் தெருவிளக்குகளை சரிசெய்து எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலையன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9683

விபத்தை ஏற்படுத்தும் தெருநாய்கள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பஸ் நிலையம், ஊத்தங்கரை ரோடு, கிருஷ்ணகிரி ரோடு உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன. இவ்வாறு அடிக்கடி தெருநாய்கள் இறந்து போவது மத்தூர் பகுதியில் வாடிக்கையாக உள்ளது. எனவே தெருநாய்களை பிடிக்க முன்வருவார்களா? -கண்ணன், மத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9681

புதிய குப்பை தொட்டி தேவை

புதிய குப்பை தொட்டி தேவைகுப்பை

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வங்கிகள், பள்ளிகள், கோர்ட்டுக்கு செல்லும் சாலை இந்த பகுதியில் தான் உள்ளது. மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். அங்குள்ள குப்பை தொட்டி சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி அங்கு புதிய குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். -கணேசன், புதிய வீட்டு வசதி வாரியம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9678

மனநோயாளிகளை பாதுகாக்கலாமே!

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் மனநலம் பாதித்தவர்கள் சுற்றி திரிகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து பாதுகாக்க முன்வருவார்களா? -பொன்னுவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9676

சேதமடைந்த சுற்றுலா நடைபாதை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை சேதமடைந்தது. மேலும் மெயின் அருவி மற்றும் பெண்கள் குளிக்கும் அருவி மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக சீரமைத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிசாமி, ஒகேனக்கல், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9671

பயன்படுத்தாத குப்பை தொட்டிகள்

பயன்படுத்தாத குப்பை தொட்டிகள்குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காமராஜாபேட்டையில் பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை கீழே கொட்டி வந்தனர். சுகாதார சீர்கேட்டை தடுக்க பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குப்பைதொட்டிகள் வாங்கப்பட்டன. அதை தெருக்களில் வைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக போட்டு வைத்துள்ளனர். இதனால் குப்பை தொட்டிகள் வீணாகி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும். -சந்திரன், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9669

ஆமை வேகத்தில் பாலம் அமைக்கும் பணி

ஆமை வேகத்தில் பாலம் அமைக்கும் பணிசாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே சிறிய பாலம்அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆமை வேகத்தில் பணி நடைபெறுவதால் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் பஸ் நிலையம் செல்ல சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் மழைக்காலம் வருவதற்கு முன் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளங்கோ, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9666

பஸ் வசதி இல்லாத கிராம மக்கள்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் இருந்து நடு குட்லான‌அள்ளி, திண்ண குடலான‌அள்ளி, பன்னி‌அள்ளி, கொல்லப்பட்டி, ஜிட்டான்டஅள்ளி, மாரவாடி ஆகிய கிராமங்களுக்கு பல ஆண்டு்களாக பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -செந்தில், நடுகுட்லானஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9471

வைக்கோல் கட்டு வைக்கும் இடமான நிழற்கூடம்

வைக்கோல் கட்டு வைக்கும் இடமான நிழற்கூடம்மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெண்டாங்கி கிராமத்தில் பயணிகள் நின்று செல்ல வசதியாக நிழற்கூடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த நிழற்கூடம் பயணிகள் பயன்படுத்த முடியாதபடி இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் சிலர் வைக்கோல் கட்டுகளை வைக்கும் இடமாக நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். நிழற்கூடத்தின் வெளி பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே வெண்டாங்கி பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -தங்கம், வெண்டாங்கி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9470

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

நாமக்கல் மாவட்டம் நல்லூர் ஊராட்சி செக்கார தெரு வழியாக செல்லும் தார்சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த தார்சாலையை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சையத் அஸ்லாம், நல்லூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9469

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அதிக போக்குவரத்து நிறைந்த நாமக்கல் சாலையில் அரசு மாதிரி மகளிர் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் மாணவிகள் அதிகளவில் சாலையில் நடந்து செல்வதை காணமுடிகிறது. ஆனால் பள்ளி முன் வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மாணவிகளின் நலன்கருதி பள்ளிக்கூடம் முன் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவலடி, மோகனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9468

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி மெயின் பைபாசில் விநாயகா பல் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள நெடுஞ்சாலையில் மின்கம்பத்தில் விளக்குகள் ஓராண்டு காலமாக சரி வர எரிவதில்லை. இதனால் அந்த சாலையில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சமந்தபட்ட துறை அதிகாரிகள் இந்த மின் விளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick