Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Aug 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9467

கழிவுகளை அகற்ற வேண்டும்

கழிவுகளை அகற்ற வேண்டும்மற்றவை

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா மேட்டூரில் இருந்து சேலம் கேம்ப் (16 கண் பாலம் வழியாக) செல்லும் வழியில் மலைப்பாதையில் சாலையின் ஓரம் இறைச்சி கொட்டப்படுகிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கழிவுகளை அகற்ற வேண்டும். -சி.சென்ன கிருஷ்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9466

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

சேலம் மாவட்டம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி 8-வது வார்டு கற்பக விநாயகர் தெருவில் தார் சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் அந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். -ராம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:51 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9465

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்கழிவுநீர்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஓலைப்பட்டி கிராமம் சிந்தாமணியூர் பஸ் நிறுத்ததில் இருந்து பாரப்பட்டி செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இந்த சாக்கடை நீர் அந்த சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். -முருகேசன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9464

சேதமடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த காரகுப்பம் சாலையில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் சாலை எங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் பயணிகள் நிலை தடுமாறி கீழே விழும் அவலம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். -மு.கிருஷ்ணமூர்த்தி, நேரலக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9463

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பத்தலப்பள்ளியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணகான வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிவதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள், மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் நபர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் போக்குவரத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9462

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பேடறஅள்ளி ஊராட்சி வைத்தியர்நகர் முதல் பேடறஅள்ளி கிராமம் வரை புதிய தார் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. இந்த பணி கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே கிடப்பில் போடப்பட்ட தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -சந்தோஷ், பேடறஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9459

வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 11-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சந்தைப்பேட்டைக்கு செல்லும் வழியில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9457

பயன்பாடிற்கு வராத குடிநீர் தொட்டி

பயன்பாடிற்கு வராத குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சுஞ்சல்நத்தம் ஊராட்சி திண்ணை பெல்லூரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயம் முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குடிநீர் இணைப்பு வழங்கி, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -பாலாஜி, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9453

துருப்பிடித்த தபால் பெட்டி

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தலைமை தபால் நிலையத்தின் வெளியே உள்ள தபால் பெட்டி துருப்பிடித்து சேதமடைந்து உள்ளது. இதனால் மக்கள் அனுப்பும் கடிதங்கள் எந்த வித சேதமும் இல்லாமல் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தபால் பெட்டியை அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9452

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய ஏரி

தண்ணீர்

ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது. இந்த ஏரியின் நீர் வழி பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லை. கடந்து 10 ஆண்டுகளாக ஏரி வறண்டு கிடக்கிறது. மேலும் அந்த சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் தட்டுபாடும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -அர்ஜூன், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9450

முட்செடிகளை அகற்ற கோரிக்கை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அண்ணாமலைஅள்ளி ஊராட்சியில் காவேரிப்பட்டியில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் படர்ந்துள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. அப்போது எதிர் எதிரே ஒன்றுக்கொன்று செல்லும் போது போதுமான இடவசதி இல்லை. வாகனங்களில் செல்வோர் மீது சாலையோரத்தில் உள்ள முட்செடிகள் படுகின்றன. எனவே இந்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுகக் வேண்டும். -வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9261

நிழற்கூடம் அமைக்க வேண்டும்

நிழற்கூடம் அமைக்க வேண்டும்போக்குவரத்து

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதன்மேல் துணியால் அமைக்கப்பட்டுள்ளதால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வேகமாக காற்று அடித்தால் கூட அந்த நிழற்கூடம் சாய்ந்துவிடும். எனவே பொதுமக்கள் நலன் கருதி கான்கிரீட்டால் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? -சுந்தர்ராஜ், சங்ககிரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick