Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Aug 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9260

சாக்கடை கால்வாய் தேவை

சாக்கடை கால்வாய் தேவைகழிவுநீர்

சேலம் மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட துளசி நகர் பகுதியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு குவியும் குப்பைகளை தினமும் அகற்றவும், சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9259

பள்ளத்தால் விபத்து

பள்ளத்தால் விபத்துசாலை

சேலம் 35-வது வார்டு அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு சென்னை செல்லும் பிரதான சாலை வளைவில் பெரியபள்ளம் உள்ளது. அந்த பள்ளம் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், முதியவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள பள்ளத்தை சரி செய்ய முன்வரவேண்டும். -மணிவாசகம், அம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9257

வேகத்தடை வேண்டும்

சாலை

சேலம் குமாரசாமிப்பட்டி பகுதி செக்கார தெரு மற்றும் மாணிக்கம் தெரு சந்திக்கும் இடம் உள்ளது. இந்த பகுதி நான்கு சாலைகளும் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்த வழியாக 4 புறங்களில் இருந்தும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் பதுகாப்பு கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். -ஊர்பொதுமக்கள், குமாரசாமிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9256

கடும் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பல குடும்பங்களின் நிலை வறுமையில் வாடுகின்றன. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்ய வேண்டும். -வரதன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9255

முடிவடையாத தார்சாலை பணி

சாலை

கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்திக்குள் செல்ல பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் பைபாஸ் சாலையையும், பரமத்தி பிரிவு சாலையையும் இணைக்கும்‌ பகுதியில் தார்சாலை முழுமையாக அமைக்கப்படாததால் மண் சாலையில் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க இணைப்பு சாலை பகுதியில் முழுமையாக தார்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கவேல், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9253

கொல்லிமலை சாலையில் ஆபத்தான பயணம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சிலர் பொருட்களை வாங்கி கொண்டு சரக்கு வாகனத்தில் மலைப்பகுதியில் செல்லும்போது ஆட்களை பொருட்களின் மீது அமர வைத்து ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு செல்லும்போது தவறி விழுந்து உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொல்லிமலை சாலையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மனோகரன், காரவள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9244

பள்ளியில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரியில் சில அரசு பள்ளிகளில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் மழைக்காலம் தொடங்குவதற்கு அரசு பள்ளிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேந்திரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9242

சாலைகளை சீரமைக்கலாமே!

சாலை

கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை செல்லும் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் வாகனங்களை ஓட்டுவதால் வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9241

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் கூட் ரோடு வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடங்களில் கடைகளும், விளம்பர பலகைகளையும் வைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும். -செந்தில்நாதன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9240

மூடப்படாத கழிவுநீர் கால்வாய்

மூடப்படாத கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

கிருஷ்ணகிரி நகராட்சி 22-வது வார்டு வேடியப்பன் கோவில் தெருவில் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு தினமும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கிறார்கள். அந்த பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாய் மூடப்படாமலும், சுத்தம் செய்யாமலும் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளதால் குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கால்வாயை மூடி, சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:11 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9238

திறக்கப்படாத பூங்கா

திறக்கப்படாத பூங்காமற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பொழுது போக்கிற்காகவும், உடற்பயிற்சி செய்யவும் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை திறக்கப்படாததால் பூங்காவில் உள்ள பொருட்கள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9231

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளி சவுருபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக 2 கி.மீ. தொலைவில் உள்ள தர்மபுரிக்கும், 3 கி.மீ. தொலைவில் உள்ள பழைய தர்மபுரி மற்றும் பாலக்கோடுக்கும் சென்று வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் சாலையானது, ரெயில்வே மேம்பாலம் முதல் பாலக்கோடு செல்லும் சவுளூர் வரை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick