Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Aug 2022 4:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9230

கழிவுகளால் சூழ்ந்த குடிநீர் தொட்டி

கழிவுகளால் சூழ்ந்த குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி பேரூராட்சி 6-வது வார்டு பைபாஸ் ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து காணப்படுகிறது. பல மாதங்களாக இந்த தொட்டியில் இருந்து குடிநீர் பயன்படுத்தப்படுவது இல்லை. இதுபற்றி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்குள்ள கழிவுகளை அகற்றி குடிநீர் தொட்டியை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -மூர்த்தி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 4:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9036

குப்பைதொட்டியை மாற்றி வைக்கவும்

குப்பைதொட்டியை மாற்றி வைக்கவும்குப்பை

சேலம் 35-வது வார்டு அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் குப்பை தொட்டிகள் உள்ளன. குப்பை தொட்டி இருந்தும் அந்த பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. அங்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள குப்பைகளை அள்ளி குப்பை தொட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிவாசகன், அம்மாபேட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 4:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9031

விரைவில் நடவடிக்கை தேவை

மின்சாரம்

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டியில் உள்ள ஜி.கே. கரட்டூர் பகுதியில் இருந்து காட்டூர் எலும்பு காட்டுக்கு செல்லும் சாலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிராஸ்பார்மரில் லாரி மோதிய பிறகு அதில் ஒரு பெட்டி ஒன்று ஆபத்தான நிலையில் தொங்கியபடி இருக்கிறது. அந்த வழியாக கரட்டூர் பள்ளிக்கு மாணவர்கள் செல்வதால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்தப் பெட்டியை உரிய இடத்தில் பொருத்த விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -ஊர்பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#9029

உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி- பேளூர் பிரிவு ரோட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுர விளக்குகளில் ஒன்று மட்டுமே எரிகிறது. மற்ற விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அனைத்து விளக்குகளும் எரிய செய்ய வேண்டும். -வெங்கடேஸ்வரி, வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9026

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கலாமே!

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் பணி செய்யும் பொழுது தற்பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கையுறை, முககவசம் போன்றவை இல்லாமல் பணிகளில் ஈடுபடுவதினால் அவர்களுக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களின் நலன் கருதி பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். -தனபால், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9024

பழுதான டவுன் பஸ்கள்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதிகம் பேர் பயணம் செய்கிறார்கள். சில டவுன் பஸ்களில் படிக்கட்டுகள், பஸ்சின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. மழைக்காலங்களில் பஸ்சின் உள்ளே மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த டவுன் பஸ்களை சீரமைக்க வேண்டும். -கோபால், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#9023

சாக்கடை கால்வாய் தேவை

சாக்கடை கால்வாய் தேவைகழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி பழனிநகரில் இருந்து வரும் கழிவுநீர் நாமக்கல்- துறையூர் மெயின் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். நடந்து செல்லும் மக்களும் இந்த கழிவுநீரால் கடும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். -ராஜா, எருமபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9006

அதிகாரிகள் கவனிப்பார்களா?

சாலை

ஓசூர் முல்லைநகரில் ராயக்கோட்டை சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி முன்பு சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் பள்ளி உள்ளது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்கள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ்குமார், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9005

விஷப்பூச்சிகளின் கூடாரம்

விஷப்பூச்சிகளின் கூடாரம்மற்றவை

ஓசூர் மாநகராட்சியில் ஓம் சக்தி நகரில் இருந்து மகாலட்சுமி நகர் செல்லும் சாலையின் ஓரத்தில் கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவில் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவு பொருட்கள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிதேவ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9004

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி நெல்லூர் பிரிவு ரோடு முதல் எடவனஅள்ளி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை தார்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான தார்சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். -சி.கிருஷ்ணமூர்த்தி, எடவனஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#9002

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி தொடங்கும் போதும், முடியும் போதும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவிகள் சாலையை கடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -இளஞ்செழியன், தேன்கனிக்கோட்டை, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:11 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#9000

ஆபத்தான சாக்கடை கால்வாய்

ஆபத்தான சாக்கடை கால்வாய்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பைசுஅள்ளி ஊராட்சி மாட்லாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. மழை காலங்களில் கழிவு நீர் கால்வாய் தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்லும் போது, சிலர் அதில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக, ஆபத்தான நிலையில் உள்ள சாக்கடை கால்வாயின் மேல்பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆனந்த்பாபு, மாட்லாம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick