Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2022 3:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8998

பஸ் வசதி இல்லாத கிராமம்

பஸ் வசதி இல்லாத கிராமம்போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கன்சால்பைல் கிராமம் மற்றும் அதனை சுற்றி 1,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அந்த கிராமத்திற்கு 35 ஆண்டு்களாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இந்தநிலையில் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டூர் அரசு பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் வனப்பகுதியை கடந்து செல்வதால் வனவிலங்குகளால் அச்சுறுத்தலும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அந்த பகுதிக்கு பஸ்களை இயக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8997

ஆபத்தான நிலையில் மீட்டர் பெட்டி

ஆபத்தான நிலையில் மீட்டர் பெட்டிமின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த பெட்டி திறந்த நிலையில் காணப்படுகிறது. அதன் அருகே தினமும் சிறுவர்கள் விளையாடுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை சீரமைத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருமால், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8995

பூட்டியே கிடக்கும் நூலகம்

பூட்டியே கிடக்கும் நூலகம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் சுஞ்சல் நத்தம் ஊராட்சி ஏரியூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதியில் மாணவ-மாணவிகள், இளைஞர்களின் பயன்பாட்டிற்காக நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். இதுபற்றி புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -உமா, ஏரியூர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8834

ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகள் அவதி

மின்சாரம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரசவ பிரிவு கட்டிடத்தில் 2-வது தளத்தில் மின் விசிறி பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அங்குள்ள ்தரைதளத்தில் டைல்ஸ்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அங்குள்ள மின்விசிறியை சரிசெய்து, சேதமடைந்த தரைதளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். சி.பழனிசாமி, செங்கானூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8833

தூர்வார வேண்டிய ஏரி

தூர்வார வேண்டிய ஏரிமற்றவை

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே போடிநாய்க்கன்பட்டி ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏரியை தூர்வாரி ஏரி நீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்து, போடிநாய்க்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 5:31 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8832

மதுபிரியர்கள் ஆக்கிரமித்த சாலை

மற்றவை

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து சீதாராம் சாலை செல்கிறது. அந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக மாலையில் சாலையோரத்திலே ஏராளமானோர் வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்துகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மதுபிரியர்கள் ஆக்கிரமித்த சாலையில் ரோந்து சென்று கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், சத்திரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8831

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை அடுத்த எடப்பாடி ரோட்டில் இருந்து பாட்டப்பன் சாமி கோவில் வரை செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழேவிழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்து வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கராஜ், மகுடஞ்சாவடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8830

பத்திரப்பதிவு அலுவலகம் வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளை இரண்டாக பிரித்து மல்லசமுத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பிரிவும், ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்னொரு பிரிவும் பத்திரம் பதிவு செய்யும் முறைதான் இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி வெண்ணந்தூரில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் அமைத்து வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளை ஒரே இடத்தில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8829

பாலத்தில் குவிந்துள்ள மணல்

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் வள்ளியம்மன் கோவில் அருகே வாய்க்கால் பாலத்தில் மணல் குவிந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே பாலத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8828

நோய் பரவும் அபாயம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வரலாற்று புகழ் வாய்ந்த நைனாமலை கோவில் அமைந்துள்ளது. அதன் அடிவாரத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்பவர்கள் குரங்குகளுக்கு அழுகிப்போன பழங்களை தின்பதற்காக போட்டு செல்கின்றனர். அவற்றை சாப்பிடும் குரங்குகளுக்கு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு் ஏற்பட்டு வருகிறது. எனவே அவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மனோகரன், மின்னம்பள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8811

தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- காரகுப்பம் செல்லும் சாலையில் பொதுமக்கள் காலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே அந்த சாலையில் தெருவிளக்குகள் அமைத்தும், கொடி, கொடிகளை அகற்ற வேண்டும். -பாலா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 4:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8810

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

ஓசூர் பாகலூர் சாலையில் கே.சி.சி. நகர் அருகே வைகை நகர் என்ற புதிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். புதிதாக வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. சின்ன எலசகிரி செல்லும் மெயின் ரோட்டில் இருந்து வைகை நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த சாலையை தார் சாலையாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். -ராமச்சந்திரன், வைகை நகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick