Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Aug 2022 3:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10710

சுகாதார சீர்கேடு

குப்பை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரலாற்று புகழ்வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு அருகே பழமை வாய்ந்த தெப்பக்குளம் உள்ளது. இந்தநிலையில் அந்த குளத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வாய்க்கால் அடைக்கப்பட்டதால் குளம் முழுவதும் கழிவு பொருட்கள் தேங்கி கிடக்கிறது. பல ஆண்டுகளாக இதேநிலையில் காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதனை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -தர்மா, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10709

தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்றும், இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -ஊர்பொதுமக்கள், மல்லசமுத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10708

பஸ் நிலையம் வராத பஸ்கள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து பயணிகளை இறக்கி விடாமல் 90 சதவீத பஸ்கள் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்லும் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அய்யனார், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10707

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

ஓசூர் அருகே கொத்தூர் பிரிவு பாதையில் இருந்து கொத்தகொண்டபள்ளி செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, சிறு தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகள், கடைகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இந்தநிலையில் அங்குள்ள சாலை ஒரு வழி சாலையாகவும், குண்டும், குழியுமாகவும் மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே சாலையை அகலப்படுத்தவும், சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். - நசீர் அகமத், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10705

பயன்படாத நூலகம்

பயன்படாத நூலகம்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தளி பஸ் நிலையத்தில் அரசு கிளை நூலகம் உள்ளது. அந்த நூலகத்தின் கட்டிடம் சேதமடைந்து பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது. பல ஆண்டுகளாக இதேநிலையில் இருப்பதால் அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. எனவே பாழடைந்து பயன்படாமல் காணப்படும் அந்த நூலகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். -முனிராஜ், தளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10703

இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்

இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் எக்கூர் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தபடியும் இருக்கின்றன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். -எம்.ராஜேஷ், எக்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10702

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி நகரில் தெருநாய்கள் ெதால்லை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்கள் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையின் குறுக்கே ஓடுவதால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டுரங்கன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10701

செயல்படாத சிக்னல் விளக்குகள்

போக்குவரத்து

தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சில சிக்னல் விளக்குகள் செயல்படாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சிக்னல் விளக்குகளை சரிசெய்து செயல்பாட்டு கொண்டு வர வேண்டும். -முருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10700

மழைநீரில் தத்தளிக்கும் வாகனங்கள்

மழைநீரில் தத்தளிக்கும் வாகனங்கள்சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளியில், ஏரியூர்- மேச்சேரி பிரதான சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைநீரில் தத்தளித்து செல்லும் வாகனங்கள் நீரை பீய்ச்சி அடித்தபடி செல்கின்றன. இந்த தண்ணீர் சாலையோரம் நடந்து செல்வோர், குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மீது படுவதால் கடு்ம் சிரமம் அடைகின்றனர். எதிர்பாராத...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10698

பயணிகள் அச்சம்

பயணிகள் அச்சம்போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் குறுக்கும், நெடுக்குமாகவும், அதிவேகமாகவும் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும். -மணிவண்ணன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 3:00 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10512

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவைகழிவுநீர்

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவாரபட்டி ஊராட்சி பகுதியில் வெங்கடேஸ்வரா நகரில் ஏராளமாக குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் குடியிருப்புகளுக்கு அருகே மழைநீர் கால்வாய் செல்கிறது. தற்போது அந்த கால்வாயில் கழிவுநீர் உறிஞ்சிக்குழாய் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10510

அவசியம் தேவை நூலகம்

மற்றவை

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் கச்சராயனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கச்சராயனூர் கிராமத்தை சுற்றி உள்ள ஊஞ்சக்காடு, கெண்டிநகர், வெள்ளாட்டுகாரனூர், மூக்கரையன்காடு, மோட்டூர், ஆரிக்கவுண்டனூர், கரும்பூசாலியூர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் போட்டி தேர்வில் பங்கேற்கவும், பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் அந்த பகுதியில் நூலகம் அமைக்கப்படவில்லை. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கச்சராயனூரில் நூலகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick