Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Aug 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10936

வேகத்தடைகள் அவசியம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் மருத்துவமனை, வங்கிகள், அரசு அலுவலகம் போன்ற இடங்களில் அதிக விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனால் காந்தி சிலை, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, அசோக் மருத்துவமனை, குப்பம் ஜங்சன், பூதிமுட்லு கிராம சாலை போன்ற இடங்களில் வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும். -பிரசாத், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10934

சீரமைக்கப்பட வேண்டிய சாலை

சாலை

ஓசூர் அருகே பாகலூர் சர்க்கிளில் பேரிகை செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள், போலீஸ் நிலையம், மருத்துவமனைகள், ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. பாகலூரின் பிரதான பகுதியில் உள்ள இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட வேண்டும். -பாலகிருஷ்ணன், பாகலூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10933

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரப்பதிவு செய்கின்றனர். இந்தநிலையில் கணினி கோளாறு மற்றும் ஆட்கள் பற்றாக்குறை என்றுகூறி நாள் முழுவதும் பொதுமக்களை காக்க வைத்தும், அலைக்கழித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பத்திரப்பதிவுக்கு வருபவர்கள் தங்கள் பணியை சிரமம் இன்றி முடித்துச் செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கனகராஜ், குளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:10 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10932

பயன்படாத குடிநீர் தொட்டி

பயன்படாத குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கும்மனூர் ஊராட்சி நமாண்டஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த தண்ணீர் தொட்டிக்கு நீரேற்றும் மோட்டார் பழுதாகி பயன்பாடின்றி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான மின் மோட்டாரை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். -செல்லதுரை, நமாண்டஅள்ளி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10931

பஸ் நிறுத்தத்தில் தேங்கும் மழைநீர்

பஸ் நிறுத்தத்தில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் இடத்தில் மழைநீர் கால்வாய் சீரமைக்கப்படாததால் அந்த பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதன்காரணமாக பயணிகள், இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் கடும் சீரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மழைநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10930

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மெயின்ரோடு 7-வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்களை துரத்தி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பில் சீனி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#10929

புகார் பெட்டியால் ஆக்கிரமிப்பு அகற்றம்

புகார் பெட்டியால் ஆக்கிரமிப்பு அகற்றம்ட்ரெண்டிங்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடைவீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளாலும், சாலையோரம் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் டெம்போ வாகனங்களாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் சுஞ்சல் நத்தம் ஊராட்சி பணியாளர்கள் ஏரியூர் போலீசார் உதவியுடன் அகற்றினர். இதற்கு நடவடிக்கை நடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10715

தடுப்பணை கட்டப்படுமா?

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வசிஷ்ட நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்தும் பணி தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளனர். ஆனால் அந்த பகுதி விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தை நம்பி உள்ளனர். தடுப்பணை கட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால் விவசாயம் செய்வதற்கும், குடிநீர் தேவைக்கும், வீணாகும் நீரை சேமிப்பதற்கும் இந்த தடுப்பணை மூலம் பயன் பெற முடியும். எனவே தடுப்பணை கட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10714

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் வலதுப்புற சர்வீஸ் ரோட்டில் இருந்து மேத்தா நகருக்குள் நுழையும் இடத்தில் சாலை மோசமாக காணப்படுகிறது. பொதுமக்கள் நடந்துகூட செல்லமுடியாத அளவிற்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க முன் வர வேண்டும். -கணேஷ், திருவாக்கவுண்டனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10713

பஸ்சில் ஆபத்தான பயணம்

பஸ்சில் ஆபத்தான பயணம்போக்குவரத்து

சேலம் மாவட்டம் எடப்பாடி வழியாக மாணிக்கம்பட்டி, பெருமாள் வளவு, காட்டு பாளையம் மற்றும் கட்டிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஜலகண்டாபுரம் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பஸ்சில் சென்று படிக்கும் மாணவர்கள் பஸ்கள் தாமதமாக வருவதாலும், பஸ் பற்றாக்குறை காரணமாகவும் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் படியில் ஆபத்தான பயணம் செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10712

புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டதுட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிங்கிரிப்பட்டி, இந்திரா நகர் காலனியில் மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். -சீ.சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10711

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?சாலை

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரம் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிலோ மீட்டரை குறிக்கும் கல் வாகனம் மோதியதில் இடிந்து சாய்ந்து கிடக்கிறது. அதை சீரமைக்காமல் அப்படியே பெயிண்டு அடித்து எழுதப்பட்டுள்ளது. அதனால் கல் சாய்ந்த நிலையில் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சீரமைப்பார்களா? -சுப்பு, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick