Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Aug 2022 3:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11372

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலை அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருகே ஹவுசிங் போர்டு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -அஜ்மல், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11371

பயன்பாட்டுக்கு வராத மேம்பாலம்

சாலை

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்தாலும் தற்போது முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு மேம்பாலம் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -தே.சக்கரவர்த்தி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11370

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த அத்திமுட்லுவில் இருந்து அகரம் செல்லும் சாலை சுமார் 1 கி.மீ. தூரம் சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், நடந்து செல்லும் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11369

மழைநீரால் சேதமான சாலை

மழைநீரால் சேதமான சாலைசாலை

பாலக்கோடு- தர்மபுரி சாலையில் பாலக்கோடு மெயின் பஜாரில் தார்சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். -நீரஜ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11367

குப்பைகளை அகற்றலாமே!

குப்பைகளை அகற்றலாமே!குப்பை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரை பிரதான சாலையில் ஏரியூர் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுகின்றனர். இந்த குப்பைகளால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்பதால் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும். -விவேக்குமார், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10966

தாழ்வாக செல்லும் மின்கம்பி

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலம்பட்டியில் பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் அருகே அதிக உயர்மின் அழுத்த கொண்ட மின்கம்பி தாழ்வாக செல்கிறது. மேலும் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரி செய்யவும், செடி, கொடிகளை அகற்றவும் நடவடிக்க எடுக்க வேண்டும். -குமரப்பன், ஆலம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10965

அடிக்கடி மின்தடையால் மக்கள் அவதி

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் மாலை நேரத்தில் மின்தடையால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நிவாஸ், சேந்தமங்கலம, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#10964

சாலையில் ஏற்பட்ட குழியால் விபத்து

சாலையில் ஏற்பட்ட குழியால் விபத்துசாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து ஓ.சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தொட்டிபட்டி செல்லும் சாலையில் சேமூர் ஏரி அருகே சாலை வளைவில் பைப் லைன் உடைப்பை சரி செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. அந்த பணி முடிந்தும் குழியை மூடி சாலை அமைக்காததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழி அருகே வைக்கப்பட்டுள்ள கற்களில் மோதி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், ஓ.சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10957

தெருவிளக்கு எரியவில்லை

மின்சாரம்

சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு குமரன் நகர் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் கடும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் தேள், பாம்பு என விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. குழந்தைகள், பெண்கள் வீட்டை வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கை சரிசெய்து எரிய செய்ய வேண்டும். -ராமதந்திரன், சன்னியாசிகுண்டு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10956

கழிவுநீரால் சேதமான சாலை

கழிவுநீரால் சேதமான சாலைகழிவுநீர்

சேலம் சேகோ சர்வையொட்டி நரசோதிப்பட்டி மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த சாலை சேதமடைந்து பள்ளம் பள்ளமாக காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். அந்த பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாக்கடை கால்வாயை சரிசெய்து, சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவேண்டும். -கிரிதரண், நரசோதிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#10954

ஜல்லிகற்களாக மாறிய சாலை

ஜல்லிகற்களாக மாறிய சாலைசாலை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளக்காடு பகுதியில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஓடை செல்லும் சாலை என்பதால் பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்த பாலத்தை மூடிய வேலையாட்கள் ஜல்லி கற்களை அகற்றாமல் அப்படியே போட்டு விட்டனர். அதனால் ஆத்தூர்- திருச்சி சாலை ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் சைக்கிள் பஞ்சர் ஆகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கற்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#10946

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

வீடுகளை சூழ்ந்த மழைநீர்தண்ணீர்

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி முல்லை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விஷப்பூச்சிகள், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்வதற்கு மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் தவறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. மழைநீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick