Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Aug 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11586

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலக சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.பி.நாகராஜ், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11584

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாகலஅள்ளி ஊராட்சி பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தில் குடியிருப்பு மக்களின் குடிநீர் தேவைக்காக, அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் குடிநீர் குழாய்களில் மரக்குச்சிகளை சொருகி வைத்துள்ளனர். மேலும் அதிகளவில் குடிநீர் வீணாகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து பாதுகாப்பான முறையில் குடிநீர் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சற்குணம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11583

வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி-தேன்கனிக்கோட்டை சாலையில் சாமனூர் கூட்ரோடு பகுதியில் 3 பக்கமும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் அதி வேகமாக செல்கின்றனர். இந்த பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அதிகமாக உள்ளனர். விபத்து நடக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். -சசிதருன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11582

அரசு பள்ளி அருகே தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தா்மபுாி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே சாக்கடை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல மாதங்களாக சாக்கடை நீர் தேங்குவதால் சுற்றுச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஞானவேல், ஏரியூர்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11406

தூர்வார வேண்டிய கிணறு

மற்றவை

சேலம் மாவட்டம் மூங்கில்பாடி பஞ்சாயத்து சேனைக்கவுண்டனூர் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக பழமையான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர். தற்போது கிணற்றை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிணற்றை தூர்வாராமல் அப்படியே விட்டு விட்டார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கிணற்றை தூர்வாரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11405

அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சந்தப்பேட்டையை அடுத்த மாதேஸ்வரன் காம்ப்ளக்ஸ் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஏத்தாப்பூர் பேரூராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அடிக்கடி உடையும் குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். -ஊர்மக்கள், ஏத்தாப்பூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 5:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11404

ஆமை வேகத்தில் சாலை பணி

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடிக்கு மேல் மலைமேல் அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு பஸ்சில் சென்று வர மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி வேகமாக நடைபெறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி அந்த பணியை விரைவாக முடித்து பஸ் இயக்க வேண்டும். -வீரவேல், மின்னம்பள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11403

சாக்கடை கால்வாயில் ஓடும் குடிநீர்

சாக்கடை கால்வாயில் ஓடும் குடிநீர்தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சாக்கடை கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள அந்த குடிநீர் குழாயின் மூடி இல்லாததால் தண்ணீர் வீணாக கழிவுநீரில் கலந்து ஓடுகிறது. இப்படி அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் முன்பு குடிநீர் குழாயின் மூடி இல்லாமல் தண்ணீர் வீணாகிறது. சாக்கடை கால்வாய் வழியாக வினியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி பலமுறை புகார்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 5:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11402

புகார் பெட்டியால் குடிநீர் வினியோகம்

ட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்றும், இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலை இருந்தது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் துரித நடவடிக்கையில் இறங்கினர். அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11375

மீண்டும் டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ஓசூர் மாநகரில் சுற்று வட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களின் சேவையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். -ஏஜாஸ் ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11374

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகப்பள்ளி ஊராட்சி ராஜேஸ்வரி லே அவுட் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதிக வாகன போக்குவரத்துள்ள இந்த சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவதாஸ், பேகப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 4:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11373

சீரமைக்க வேண்டிய அங்கன்வாடி மையம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே புதூர்புங்கனை ஊராட்சியில் புங்கனை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது வீசிய காற்றில் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. மேற்கூறை இல்லாத அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் மழையில் நனைந்தபடி தங்கி இருப்பதால் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அங்கன்வாடி மையத்தை உடனடியாக சரி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்திபன், புங்கனை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick