Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2024 5:10 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48851

லாரிகளால் விபத்து அபாயம்

போக்குவரத்து

ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டுமான பொருட்களான இரும்பு கம்பிகள், தகர குழாய்களை ஆபத்தான முறையில் சாலையில் உரசும் படி கொண்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கட்டுமான வாகனத்தின் முன்னாலும், பின்னாலும் வரும் வாகனங்கள் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே போலீசார் உரிய பாதுகாப்பு இன்றி சாலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:09 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#48850

மின்விளக்குகள் சரி செய்யப்படுமா?

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக மின் கம்பத்தில் இருந்த மின்விளக்குகள் உடைந்து கீழே தொங்கியபடி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. போதுமான வெளிச்சம் இல்லாததால் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் விஷபூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து உடைந்து தொங்கியபடி உள்ள மின்விளக்குகளையும், எரியாத மின் விளக்குகளையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 5:07 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#48849

சேதமடைந்த அரசு கால்நடை மருத்துவமனை

மற்றவை

பாலக்கோடு தாலுகா கல்கூடஅள்ளியில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை சேதமடைந்து உள்ளதால் மழை நேரங்களில் தண்ணீர் கசிந்து கட்டிடத்திற்குள் வழிகிறது. மேலும் கால்நடை மருத்துவமனையின் கதவு, ஜன்னல் உடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய அரசு கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சிவகுரு, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 4:59 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#48848

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். நாய் கடியால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரே இடத்தில் 40-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுவதால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 4:57 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#48847

`பைக் ரேசால்' தொடரும் விபத்துகள்

போக்குவரத்து

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி 6 வழிச்சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இந்த சாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான வாலிபர்கள் `பைக் ரேஸ்' செல்கிறார்கள். குறிப்பாக பெங்களூரு பகுதியில் இருந்து அதிக சத்தம் எழுப்ப கூடிய வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால், பிற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாகவும், அச்சமும் ஏற்படுகிறது. இவ்வாறு `பைக் ரேஸ்' செல்லும் வாலிபர்கள் அடிக்கடி விபத்தில் உயிர் இழந்தாலும், தொடர்ந்து `பைக் ரேசில்' ஈடுபட்டு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 4:55 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#48846

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூரில் இருந்து எமக்கல்நத்தம் செல்லும் சாலையில் நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட நகர பஸ்களும், 30-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலை செல்லும் சின்ன பர்கூர் பகுதியில் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2024 4:53 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#48844

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே தேசிய நெடுஞ்சாலை இணைய கூடிய பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பொதுமக்களும், கோவிலுக்கு வந்து செல்ல கூடிய பக்தர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 6:20 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#48697

வேகத்தடை வேண்டும்

சாலை

சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் அருகில் பிரதான சாலையோரம் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் அதிகளவில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் இருபுறமும் வேகத்தடை இல்லை. மேலும் இது பிரதான சாலையாக இருப்பதால் வாகனங்கள் மிக வேகமாக சென்று வருகின்றன. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அவசியம் அமைத்து தர வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. -சல்மான்கான், சின்னத்திருப்பதி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 6:13 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#48689

கம்பளி பூச்சிகள் படையெடுப்பு

மற்றவை

சேலம் பெரமனூர் அய்யனாரப்பன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கம்பளி பூச்சிகள் அதிகளவில் படையெடுத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த கம்பளி பூச்சிகள் சேலம் 4 ரோடு கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வீடுகளுக்குள் சென்று உணவு பொருட்கள், தண்ணீர் பாத்திரங்களில் விழுகின்றன. மேலும் குழந்தைகள், பெரியவர்களை கம்பளி பூச்சிகள் கடிப்பதால் உடலில் அரிப்பு, கை, கால்களில் தடிப்பு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் கல்லறை தோட்ட பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 6:00 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48655

விபத்து அபாயம்

போக்குவரத்து

நாமக்கல் நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகும். இங்கு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் சகஜமாக நடந்து வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சில சரக்கு ஆட்டோக்களின் அளவுக்கு அதிகமாகவும் ஆட்களை ஏற்றி செல்வதை பார்க்க முடிகிறது. எனவே விபத்து, அதன் மூலம் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முன்எச்சரிக்கையாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 5:58 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#48653

குடிநீர் வீணாகிறது

தண்ணீர்

வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கண்டர்குலமாணிக்கம் பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அலவாய்பட்டி பஞ்சாயத்து கசாலகுட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. சேதமடைந்த குழாயை சரிசெய்யாததால் தண்ணீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் குடிநீர் வினியோகம் நின்றதும், சாலையில் தேங்கிய தண்ணீர் மீண்டும் குழாயில் செல்வதால், மாசு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2024 5:56 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#48651

கிணறு தூர்வாரப்படுமா?

தண்ணீர்

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காந்திபுரத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. அதன் வளாகத்தில் கிணறு ஒன்று தூர்ந்து போய் உள்ளது. இந்த கிணற்றில் இப்பகுதியில் உள்ள சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கிணறு தற்போது குப்பை கிடங்காக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு கிணற்றை தூர்வாரி பொதுமக்களுக்கும், கால்நடை ஆஸ்பத்திரிக்கும் தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -ஜெயபால், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick