4 Aug 2024 5:09 PM GMT
#48850
மின்விளக்குகள் சரி செய்யப்படுமா?
தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக மின் கம்பத்தில் இருந்த மின்விளக்குகள் உடைந்து கீழே தொங்கியபடி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. போதுமான வெளிச்சம் இல்லாததால் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் விஷபூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து உடைந்து தொங்கியபடி உள்ள மின்விளக்குகளையும், எரியாத மின் விளக்குகளையும் சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், சிக்கமாரண்டஅள்ளி.