Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Jun 2025 5:12 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56954

இருளில் மூழ்கும் தார்சாலை

மின்சாரம்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தை ஒட்டி வடக்கு பகுதியில் தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக அருகே உள்ள அரசு அலுவலகங்கள், கிடங்கு, வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பட்டாளம்மன் கோவில் பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்புகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையில் தெரு விளக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:10 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#56953

சுகாதார சீர்கேடு

மற்றவை

ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் கரை ஓரங்களிலும், பரிசல் துறையில் பரிசல்கள் நிறுத்த வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் ஒருசிலர் இயற்கை உபாதைகளை கழிப்பதாலும், மீன் கழிவுகளை வீசி செல்வதாலும் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக கவனிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. -மணிமேகலை, பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:08 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#56952

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் 4 ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மதுபிரியர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் வரும் மதுபிரியர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இதே பகுதியில் மது அருந்திவிட்டு ஒரு சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வழியே செல்ல பெண்களும், மாணவர்களும் அச்சப்படுகிறார்கள். எனவே போலீசார் இந்த டாஸ்மாக் கடை முன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:07 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56951

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் 2-வது வார்டு உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கடந்து செல்லும் போது முகம் சுளிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்திடவும், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:05 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56949

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மகராஜகடை சாலை, முருகன் கோவில் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகளின் அருகிலேயே சுற்ற கூடிய இந்த நாய்கள் சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறு வாரந்தோறும் 2 முதல் 3 பேர் வரை விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். மேலும் ெதருநாய் கடியாலும் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் உரிய...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:02 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56946

பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் இருந்து வார விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெங்களூரு, ஓசூரில் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி விடுவதால் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடம் கிடைப்பதில்லை.அதேபோல ஞாயிற்றுக்கிழமையும், தொடர் விடுமுறை நாட்கள் நிறைவடையும் போதும் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர், பெங்களூருவுக்கு பஸ்களில் இடம் கிடைப்பதில்லை. ஆகவே கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளின் நிலையை கருத்தில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:00 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#56944

சீரமைக்க வேண்டிய சாலைகள்

சாலை

ஓசூர் மாநகராட்சி 45-வது வார்டில் காடி பாளையத்தில் ஷாயிநாத் தெரு, கங்கா பவானி தெருக்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த சாலை வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். அவசர தேவைக்கு கூட காலையை பயன்படுத்த முடிவதில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். -கவிதா, காடி பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 4:59 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#56943

சீரமைக்க வேண்டிய சாலைகள்

சாலை

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் சர்வீஸ் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளன. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலை மேலும் சேதமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். -முருகன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 5:53 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56797

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் அம்மாபேட்டையில் இருந்து அயோத்தியாப்பட்டணம் செல்லும் பிரதான சாலையில் மாசிநாயக்கன்பட்டி உள்ளது. அப்பகுதியில் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். -அருள், அம்மாபேட்டை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 5:48 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#56795

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நலவாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் தாசநாயக்கன்பட்டி பிரிவு ரோடு உள்ளது. இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. மேலும் பிரதான சாலையையொட்டி உள்ள நடைபாதையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகம் சுழித்த வண்ணம் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றவும், கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும். -சசிகுமரன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 5:47 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#56794

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சவுரியூர் பஸ் நிறுத்தம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சவுரியூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் வழியிலும் ஆடையூர் செல்லும் வழியிலும் அரசு பஸ்கள் போதுமான அளவு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்களை முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 5:46 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#56791

இருளில் மூழ்கும் மேம்பாலம்

மின்சாரம்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் நான்கு ரோடு அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சில எரிவதில்லை. இதனால் போதுமான வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள், பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இருளில் மூழ்கும் மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா? -ஆகாஷ், பெரமனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick