Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jun 2023 12:58 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#34844

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?மற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலையில் வேலூர் மார்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிழற்குடை இருந்தது. சாலை விரிவாக்கப் பணிக்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பழுதடைந்த நிலையில் இருந்த நிழற்குடையை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு இன்னும் அங்கு நிழற்குடை கட்டவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 12:51 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#34838

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

கீழ்பென்னாத்தூர் காவலர் குடியிருப்பு எதிரே அமைந்துள்ள பஸ் நிலையத்தில் ஒரு மாதமாக மின் விளக்குகள் எரியவில்லை. பியூஸ்போன மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை போட்டு எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:30 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34689

பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' சரி செய்யப்படுமா?

கழிவுநீர்

அரக்கோணம் கணேஷ்நகர், ஹவுசிங்போர்டு, நேருஜி நகர் ஆகிய பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் நேருஜி நகர் 4-வது தெரு பிரதான ரோட்டின் வழியாக சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரும், பள்ளி மாணவர்களும் தினமும் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜான் தாமஸ் அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34688

தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர்

அரக்கோணத்தை அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் 6 மாதமாக தண்ணீர் தட்டுப்பாட்டினால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீராக தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.-பொதுமக்கள், கீழ்ஆவதம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:26 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34687

இருள் சூழ்ந்த ஏ.டி.எம். மையம்

மற்றவை

அரக்கோணம் தாலுகா அன்வர்திகான்பேட்டை பஜார் வீதியில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதில் ஒரு மாதமாக மின் விளக்குகள் எரியவில்லை. ஏ.டி.எம். மையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 2 வாரமாக பணம் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏ.டி.எம். மையத்தை விட்டால் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணம் அல்லது சோளிங்கருக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், அன்வர்திகான்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#34686

மாடுகளால் விபத்து

மற்றவை

ஆற்காட்டில் பிரதான சாலைகளான மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளான வேலூர் மெயின் ரோடு, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் சாலை, அண்ணா சாலை, 70 அடி சாலை ஆகிய சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளில் பெரும்பாலான நேரங்களில் சாலையின் குறுக்கே மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு கை, கால் முறிவு சம்பவங்களும் நடந்துள்ளன. விபத்து, போக்குவரத்து நெரிசல் சம்பவங்கள் தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34685

அனுமதியின்றி வைக்கும் பேனர்களை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜாவில் அரசியல் பிரசாரம், சுப நிகழ்ச்சிகள், மரண அறிவிப்பு, கண்ணீர் அஞ்சலி, வரவேற்பு போன்றவற்றுக்கு பேனர்கள் வைக்கப்படுகின்றன. பேனர் கலாசாரம் வாலாஜாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி விளம்பர பேனர்களை வைத்தால், அதை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.-நாகராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:14 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#34684

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 8-வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயில் கழிவுநீர், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடவில்லை. கால்வாயை தூர்வார வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் வார்டு கவுன்சிலரோ, ஊராட்சி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். -எஸ்.அப்துல்லாபாஷா, சமூக ஆர்வலர், கடம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:09 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#34682

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்துமின்சாரம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் தம்மா தெருவில் மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையில் மின் கம்பிகள் 10 அடி உயரத்தில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பள்ளி பஸ், இதர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட வேண்டும்.-இல. குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34681

சாலையோரம் வளர்ந்த செடி, கொடிகளை அகற்றுவார்களா?

சாலையோரம் வளர்ந்த செடி, கொடிகளை அகற்றுவார்களா?சாலை

திருப்பத்தூர் மாவட்டம் செவாத்தூர் புதூர்-குனிச்சி இணைப்பு சாலை முதல் செவாத்தூர் காக்கங்கரை ரெயில் நிலையம் வரை சாலையில் இரு புறமும் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. அதில் விஷ பாம்புகள், உடும்பு, கீரிபிள்ளைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் வளர்ந்த செடி, கொடிகளை அகற்றுவார்களா?-கே. மூர்த்தி, செவாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 5:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34678

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலையின் நடுவே மின்கம்பம்மின்சாரம்

வேலூர்-ஆற்காடு சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே தோட்டப்பாளையத்துக்கு செல்லும் தெரு ஒன்று உள்ளது. அந்தத் தெருவில் சாலையின் நடுவே இரும்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அடிக்கடி சென்று வருவதால் வாகன ஓட்டிகளுக்கு அந்த மின் கம்பம் இடையூறாக உள்ளது. மேலும் நடந்து செல்லும் பொது மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை நடுவே இடையூறாக உள்ள மின்கம்பத்தை ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 1:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34676

சாலையோர பள்ளம் சரி செய்யப்படுமா?

சாலையோர பள்ளம் சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரியில் கோர்ட்டு அருகே பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையோரம் சிறிய அளவில் இருந்த பள்ளம் பெரிதாகி விட்டது. பள்ளத்தில் மரக் கிளையை நட்டு வைத்துள்ளனர். சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick