Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jun 2023 1:28 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34869

அடிப்படை வசதி தேவை

மற்றவை

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அங்கு வந்து இறங்கி, அவரவர் ஊர்களுக்கு மாற்றுப் பஸ் பிடித்து செல்கின்றனர். இங்கு ஒரு நிழற்குடையோ, குடிநீர் வசதியோ, கழிவறையோ எதுவும் இல்லை. உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணிவண்ணன், வடுகந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:24 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#34867

கோவிலுக்கு செல்லும் பாலம் பழுது

கோவிலுக்கு செல்லும் பாலம் பழுதுசாலை

பள்ளிகொண்டாவில் உத்திர ரங்கநாதர் கோவில் உள்ளது. கோவிலை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வீடுகளுக்கும், கோவிலுக்கும் செல்ல பேயாற்றின் குறுக்கே 1979-ம் ஆண்டு ஒரு சிறு பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலம் பழுதடைந்துள்ளது. அந்தப் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை இடித்து விட்டு அங்கு புதிய பாலம் கட்ட வேண்டும்.-ரெங்கராஜ், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34865

நடைபாதையில் பள்ளம்

நடைபாதையில் பள்ளம்சாலை

வேலூர் கோட்டையை நவீனப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்று நடைபாதை அமைக்கும் பணி. கோட்டை நுழைவு பகுதியில் உள்ள நடைபாதை பளிங்கு கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பளிங்கு கற்கள் திடீரென உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபாதை வழியாக நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 6:11 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34863

உடைந்த சிறுபாலம்

உடைந்த சிறுபாலம்சாலை

குடியாத்தம் உம்மிடி ராமாஞ்சுலுசெட்டி தெருவில் பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படவில்லை. இந்தத் தெருவின் 4 முனை சந்திப்புப் பகுதியில் உள்ள சிறுபாலத்தை 6 மாதத்துக்கு முன்பு 2 இடங்களில் உடைத்து கழிவுநீர் அகற்றப்பட்டது. இந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகளும், வாகனங்களும் குழியில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய கழிவுநீர் கால்வாய் கட்டி, உடைப்பை சீர் செய்ய வேண்டும்.-ஞானப்பிரகாசம், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:17 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34862

பகலில் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் உள்ள சில மின்கம்பங்களில் மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் இரவில் மின் விளக்கை எரியவிட்டு பகலில் அணைத்து விட வேண்டும்.-பார்த்திபன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:14 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34860

மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

மற்றவை

அன்வர்திகான்பேட்டை பஜார் வீதியில் இருந்து இருபுறமும் மழைக்காலங்களில் மழைநீர் வடிய கால்வாய் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன் ரெயில் நிலையம் அருகே கால்வாய் வழியாக வரும் மழைநீர் வெளியேற கீழ்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது கீழ்பாலத்தில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்து கடை கட்டப்பட்டு வருகிறது. இதனால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் பாலத்திலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற முன் வர வேண்டும்.-பொதுமக்கள், அன்வர்திகான்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:13 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#34859

வாரச்சந்தையை திறப்பது எப்போது?

வாரச்சந்தையை திறப்பது எப்போது?மற்றவை

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியானூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-2022ம் ஆண்டு நிதியில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் புதிதாக வாரச்சந்தை கட்டப்பட்டது. இந்த வாரச்சந்தை கட்டப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய வாரச்சந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#34852

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மற்றவை

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியையொட்டி ஒரு சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு அருகிலேயே கோவில், திருமண மண்டபங்கள், பள்ளிகள் உள்ளன. இதனால் பகல் மற்றும் இரவில் பெண்கள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்வதற்கு மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைக்கு அதிகமாக குடிமகன்கள் வருவதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. குடிபோதையில் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொள்வதால் அடிதடிகளும் நடக்கின்றன....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:09 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34851

தெருக்களில் தேங்கும் மழைநீரால் அவதி

தெருக்களில் தேங்கும் மழைநீரால் அவதிசாலை

அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள டவுனால் தெரு, சுப்பராயன் தெரு, சரோஜினி தெரு ஆகிய தெருக்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மழை நீரால் பள்ளம் இருப்பது தெரியாததால் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தெருக்களில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 6:12 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34850

சாலைேயாரம் விளம்பர பேனர்கள் ஆக்கிரமிப்பு

சாலை

வாலாஜாவில் மகாத்மா காந்தி பூங்கா முதல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை நடைபாதைகளில் அதிகளவில் விளம்பர பேனர்கள் அதிகரித்துள்ளன. இதை நகராட்சி அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நிர்மல்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 1:01 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#34848

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை அகலப்படுத்தப்படுமா?சாலை

பெரணமல்லூரில் இருந்து வந்தவாசி, செய்யாறு செல்லும் செங்கம்பூண்டி சாலை 5.5 மீட்டர் அகலத்தில் 2018-ம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது. தற்போது வரை நன்றாக இருந்த சாலையை கடந்த மாதம் கேபிள் ஒயர் பதிக்க பள்ளம் தோண்டி, 4.5 மீட்டர் அகலமாக சுருக்கி விட்டனர். விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் அளவீடு செய்து தடுப்புச்சுவர் அமைப்பதும், ஏரியின் ஓரம் கால்வாய்கட்டி 7 மீட்டர் அகலம் உள்ள இரு வழித்தடமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், பெரணமல்லூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 6:13 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#34847

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

எரியாத உயர்கோபுர மின்விளக்குமின்சாரம்

செங்கம் பேரூராட்சியில் பரமனந்தல் ரோடு-போளூர் ரோடு கூட்ரோட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் சில நாட்களாக எரியவில்லை. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவும் செயல்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சங்கர், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick