Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Jun 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#35145

கழிவுநீர் கால்வாய் கட்டுவார்களா?

கழிவுநீர் கால்வாய் கட்டுவார்களா?கழிவுநீர்

வாலாஜா ஒன்றியம் வி.சி.மோட்டூர் ஊராட்சி 4-வது வார்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.3½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் பணி ஆணை வழங்கி ஒரு ஆண்டாக கால்வாய் கட்டும் பணியை தொடங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். -எம்.செல்வி, வி.சி.மோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#35135

கால்வாய் கட்டித்தர ேவண்டும்

கால்வாய் கட்டித்தர ேவண்டும்தண்ணீர்

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒரு சினிமா தியேட்டர் அருகில் கலைஞர் நகர் வழியாக பஸ் நிலையம் செல்லும் வழியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு சேறும் சகதியுமாக உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீர்வடிய போதிய கால்வாய் வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் மழைநீர் வடிய கால்வாய் கட்டித்தர வேண்டும்.-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#35117

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அனந்தலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. சோளிங்கர் சாலையில் இருந்து அனந்தலை போகும் மெயின் சாலையில் ஏரிக்கோடி வரை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. பெரிய பள்ளங்களும் உள்ளன. மழை பெய்தால் அதிக அளவில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலை வழியே செல்லும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பாதிக்கப்படுகின்றன. வாகன ஓட்டுனர்கள் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயம் அடைவது அதிகரித்து வருகிறது. உடனடியாக தார் சாலையை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 1:57 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#35071

இரண்டாக பிளந்த புளியமரம்

இரண்டாக பிளந்த புளியமரம்மற்றவை

வாணாபுரம் பஸ் நிறுத்தத்தில் புளிய மரம் ஒன்று உள்ளது. இந்தப் புளிய மரத்தின் உள்பகுதி அனைத்தும் பழுதாகி இரண்டாக பிளந்துள்ளது. சாய்ந்த நிலையில் பெரிய அளவிலான கிளைகள் உள்ளன. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து ஆபத்து ஏற்படலாம். ஆபத்தான புளிய மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, வாணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#35070

சேதமான மின்கம்பம்

சேதமான மின்கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். இந்தக் கிராமத்தில் இருந்து தெற்கு தெரு செல்லும் சாலை ஓரத்தில் சேதமடைந்த மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளிேய தெரிகி்ன்றன. சேதமான மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன், தலையாம்பள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 1:51 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#35069

குப்பைகளை அள்ளுவார்களா?

குப்பைகளை அள்ளுவார்களா?குப்பை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையோரம் கடைகளில் சேகரிக்கும் மக்கும், மக்காத குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். அந்தப் குப்பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ள முன்வருமா? -ஏகாம்பரம், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 1:48 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#35068

சாலையோரம் ஆபத்தான பள்ளம்

சாலையோரம் ஆபத்தான பள்ளம்சாலை

ஆரணி சைதாப்பேட்டை அண்ணா நகர் எதிரே நேரு நகர் உள்ளது. அந்தப் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் வால்வின் மேல்பகுதி சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. அந்த வழியாக நடந்து ெசல்லும் சிறுவர், சிறுமிகள், முதியோர் குழியில் தவறி விழும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழிக்கு மூடி போட வேண்டும்.-கோவிந்தராஜ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 1:45 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#35067

வேகத்தடை அகற்றப்படுமா?

வேகத்தடை அகற்றப்படுமா?சாலை

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு தொடக்கப்பள்ளி எதிரே, ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையின் குறுக்கே வேகத்தடை உள்ளது. அந்த வழியாக சென்ற பலர் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்துள்ளனர். சிலர் பலியாகி உள்ளனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வேகத்தடையை உடனடியாக அகற்றுவார்களா?-ஜெகதீசன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 6:09 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34981

தார் சாலை அமைப்பார்களா?

சாலை

திருப்பத்தூர் டவுன் காந்திப்பேட்டையில் உள்ள கஸ்தூரிபாய் தெருவில் சாலை போடவில்லை. இதனால் மேற்படி பகுதியில் சாலை மேடும் பள்ளமுமாக, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் செல்பவர்கள் கீழே விழுந்து அடிபடுகிறார்கள். மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 6:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34978

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து

மற்றவை

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வாணியம்பாடி சாலையில் மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிகின்றன. மேலும் மாடுகள் ரோட்டில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கிறது. இருசக்கர வாகனத்தில் வருவோர் மாடுகளால் திடீர் பிரேக் போட்டு கீழே விழும் நிலை உள்ளது. எனவே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வென் பிரணவ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#34954

பாதுகாப்பின்றி பொருத்தப்பட்ட மின் விளக்கு

பாதுகாப்பின்றி பொருத்தப்பட்ட மின் விளக்குமின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டப்பனூர் அருகே சாலையில் உள்ள கம்பத்தில் போதிய பாதுகாப்பின்றி திறந்த வெளியில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தூறல் விழும்போது, சூடாக இருக்கும் மின்விளக்கு திடீரென வெடித்து சிதறவும், அதன் வழியாக மின் கசிவும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மின் விளக்கை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.ஜி.சரவணன், மண்டலவாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#34947

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிகிறது. இரவில் மருத்துவமனைக்கு வந்து செல்வோரை பின் தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick