குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த தேதியை எழுதி வைப்பார்களா?

Update: 2025-02-23 13:13 GMT

வேலூர் மாநகராட்சியில் வார்டு எண்: 4 மற்றும் 1-ல் செங்குட்டை பகுதியிலும், கல்புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதிகளிலும் பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இந்தக் குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலத்தில் சுத்தம் செய்வது வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்த நாள் அடுத்த சுத்தம் செய்யும் நாள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஆனால், செங்குட்டை வார்டு எண்:4-ல் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு கீழ் இந்த விவரம் எழுதப்படாமல் உள்ளது. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த விவரம் எழுதி வைப்பார்களா?

-பி.துரை, கல்புதூர்.

மேலும் செய்திகள்