கே.வி.குப்பம் ெரயில்பாதைக்கு தெற்கே, பெருமாள் கோவில் தெருவில், சிறு பாலம் அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அதில் இருந்த குழாய் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இருந்தது. அதை அகற்றியபிறகும் புதிய குழாய் பொருத்தவில்லை. அந்தக் குழாயில் பழைய துணி, குச்சிகளால் அடைத்து வைத்துள்ளனர். புதிய குழாய் பொருத்தினால் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராகேஷ், கே.வி.குப்பம்.