திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் காந்திநகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் ஒரே ஒரு குடிநீர் குழாயை தவிர மற்ற குழாய்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் அகற்றப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து புதிய குடிநீர் குழாய்கள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜமாணிக்கம். திருப்பத்தூர்.