வேலூர் மாநகராட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல இடங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கல்புதூர் பகுதியில் முதல் வார்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் 20 நாட்களுக்கு மேல் செயல்படாமல் உள்ளது. பராமரிப்பு இல்லாமல் உள்ள குடிநீர் நிலையம் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.துரை, கல்புதூர்.