கண்ணமங்கலம் பேரூராட்சி பழைய ரோட்டில் கண்ணமங்கலம் ஏரிக்கு நீர் வரத்துக் கால்வாய் செல்கிறது. இந்த நீர் வரத்துக் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்து கடந்த 2018-19ம்ஆண்டு சுத்திகரிப்பு குடிநீர் திட்ட ஷெட் ஏரிக்கால்வாய் கரையோரம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. அங்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் திட்ட ஷெட் விழுந்து விடும் அபாயம் உள்ளது. குடிநீர் திட்ட ஷெட்டை வேறு மாற்று இடத்தில் கட்டி குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-சத்தியமூர்த்தி, கண்ணமங்கலம்.