திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள குடிநீர் தொட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்தக் குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டிக்கு பதிலாக புதிய குடிநீர் தொட்டி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.