வாணியம்பாடியை அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தக் குடிநீர் தொட்டி தற்போது பழுதடைந்துள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, அரப்பாண்டகுப்பம்.