ஆரணி அருணகிரிசத்திரம் காண்ட்ராக்டர் பொன்னுசாமி தெரு முகப்பில் நகராட்சி குழாய் தண்ணீர் திருப்பும் வால்வில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு முறையும் நகராட்சி சார்பில் குடிதண்ணீர் வினியோகிக்கும் போது வால்வின் வழியாக அதிக அளவில் தண்ணீர் வெளியேறி கால்வாயில் செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் வால்வு சரி செய்யப்படுமா?
-ராஜுசுந்தரம், ஆரணி.