குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2025-04-20 20:09 GMT

வாலாஜா பஸ் நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் எதிரில் நான்கு வழி சாலை சந்திப்பு உள்ளது. இங்கு போலீஸ் நிலையம் முன்பு கடந்த 2 மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி உள்ளது. உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

-அசோக்குமார், வாலாஜா.

மேலும் செய்திகள்