வாலாஜாபேட்டை பஸ் நிலைய பகுதியில் நகராட்சி எதிரில் 4 முனை சந்திப்பு சாலை உள்ளது. இதில் வாலாஜா போலீஸ் நிலைய சாலை தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. இந்தத் தெருவில் கடந்த 3 வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிதண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக வாலாஜா நகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை பழுதுப் பார்க்க வேண்டும்.
-சிங்காரம், வாலாஜா.