வேலூரை அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் அடுக்கம்பாறை செல்லும் மெயின் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலவன், வேலூர்.