வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் சவுத் அவென்யூ சாலைக்கு செல்லும் தெருவில் வங்கி எதிரில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சாலையின் அடியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சற்குணம், வேலூர்.