வேலூர் கோட்டையில் கோவில் அருகே உள்ள சுகாதார கழிப்பிடம் முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாததால், தண்ணீர் தார்சாலையயை பொத்து கொண்டு பொங்கி வருகிறது. இதனால் சாலை விரைவில் பழுதடையும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கபீர்தாஸ், வேலூர்.