வாணியம்பாடி அருகே செக்குமேடு, கொத்தகோட்டை, மேல் நிம்மியம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காவிாி கூட்டுக்குடிநீர் திட்ட கேட் வால்வுகள் சரியாக அமைக்கப்படாததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அந்த இடங்களில் பெண்கள் துணி துவைப்பதாலும், வாகனங்களை வைத்து கழுவுவதாலும் சோப்பு நுரை தேங்கி நிற்கிறது. இதே தண்ணீர் கேட்வால்வு திறந்தவுடன் வீடுகளுக்கு வினியோகிக்கும் நீரில் கலந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து முறையாக கேட் வால்வுகளை மூட வேண்டும்.
-திருமறைச்செல்வன், வெள்ளக்குட்டை.