பேரணாம்பட்டு நகரம் 20-வது வார்டு பழைய ஆம்பூர் ரோட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதில் இருந்து இன்னும் வீடுகளுக்கும், தெருக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. தொட்டிக்கு அருகில் 8 தெருக்கள் உள்ளன. அந்தத் தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் வெகுதூரம் நேராக தொட்டிக்கே சென்று குடங்களில் தண்ணீரை பிடித்து வீடுகளுக்கு செல்கிறார்கள். நம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து அனைத்து வீடுகளுக்கும் அல்லது தெருக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க முன்வர வேண்டும்.
-பெ.தங்கராஜி, பேரணாம்பட்டு.