வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-07-02 14:32 GMT

கலவை தாலுகா சொரையூர் ஆற்றுப்படுகையில் இருந்து கலவை பேரூராட்சிக்கு கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சொரையூரில் இருந்து கலவைக்கு செல்லும் பிரதான குழாயில்சொரையூர் கூட்ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகில் குழாயில் கசிவு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தே.பார்த்தசாரதி, சொரையூர்

மேலும் செய்திகள்