வீணாகும் குடிநீர்

Update: 2023-01-01 17:06 GMT

வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் தபால் அலுவலக தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பள்ளம் தோண்டினார்கள். அப்போது குடிநீர் குழாய் உடைந்து விட்டது. குடிநீர் வினியோகம் செய்யும்போதெல்லாம் உடைந்த குழாய் வழியாக குடிநீர் வீணாக வெளியேறி சாலை முழுவதும் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அந்த இடத்தில் சேறும் சகதியுமாக உள்ளது. குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம். 

மேலும் செய்திகள்