திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென அலுவலக நுழைவு கேட் அருகில் பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முறையான தண்ணீர் வசதி இல்லாததால் அந்தக் கழிப்பறையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-கோபால், திருவண்ணாமலை.