ேவலூர் கஸ்பா பகுதியில் மேம்பாலம் முடியும் இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதியடைந்துள்ளனர். அங்குச் சாலைப்பணிகள் முழுமையாக முடியாததால் மழைநீர் தேங்குகிறது. தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீரை அகற்ற வேண்டும்.
-காதர், கஸ்பா.