கிணறை மூட வேண்டும்

Update: 2025-03-09 19:43 GMT

கலசபாக்கம் தாலுகா கீழ்பாலூர் கிராமத்தில் சிவன் கோவில் எதிரில் ஒரு பயனற்ற கிணறு உள்ளது. அந்தக் கிணறு பல ஆண்டுகளாக திறந்தே உள்ளது. அந்தக் கிணறு சுகாதார சீர்கேடாக உள்ளதுடன் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பயன்பாடற்றக் கிணற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், கீழ்பாலூர். 

மேலும் செய்திகள்