திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி ஊராட்சியில் வீரபத்திர கோவில் வட்டத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியின் மூடி அகற்றப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தொட்டியில் குப்பைகள், பூச்சிகள் விழ வாய்ப்பு உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அந்தக் குடிநீர் தொட்டிக்கு மூடி போட சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-கோதண்டராமன், மாடப்பள்ளி.