காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2022-09-06 09:50 GMT



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி தினமும் பகல், இரவு நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 இடங்களில் குடிநீர் சுக்கரிப்பு நிலையங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்படாமல், தற்போது காட்சி பொருளாகவே உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்