கண்ணமங்கலம் பேரூராட்சி செம்படவர் தெருவில் திருமண மண்டபம் அருகில் சிறுமின் விசை தொட்டி ஒன்று சாய்வாக உள்ளது. அந்தத் தொட்டியில் இருந்து ஏராளமான மக்கள் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே சாய்வாக இருக்கும் சிறுமின் விசை தொட்டியை முறையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-அமுல்ராஜ், கண்ணமங்கலம்.