கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் கால்வாய் பழைய ரோட்டில் மார்க்கெட், மசூதி வழியாக செல்கிறது. தனியார் பள்ளி சுற்றுச் சுவர் கால்வாயில் இடிந்து விழுந்துள்ளது. அதை அகற்றாமல் அப்படியே விட்டுள்ளனர். மேலும் தோப்புக்கானா தெரு செல்லும் வழியில் கால்வாய் மீது உள்ள சிறிய பாலம் பகுதியில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. உடனடியாக கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கந்தகுமார், கண்ணமங்கலம்.