திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரத்தில் இருந்து காவேடு ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த மழைநீரும் தார் சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நீர்வரத்துக் கால்வாயை தூர்வாரி தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லோகநாதன், கன்னிகாபுரம்.