வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுகளம்பூர் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியின் குழாய்கள் உடைந்த நிலையில் இருந்தன. அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் உடைந்த குழாய்கள் உடனடியாக மாற்றப்பட்டன. நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் கிராம மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.