கலசபாக்கம் தாலுகா மட்டவெட்டு, மேல்பாலூர் மதுரா, ராமசாமிபுரம் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான பெரிய நீரோடை வழிபாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நீரோடையின் அகலம் சுருங்கி மேல்பாலூர் ஏரிக்கு உபரிநீர் செல்ல வழியில்லாமல் மழைக் காலங்களில் அனைத்து விவசாய நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து விடுகிறது. நீரோடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பல முறை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுத்து நீரோடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரை வேண்டும்.
-லட்சுமணன், கலசபாக்கம்.