ஒடுகத்தூர் பேரூராட்சி 6-வது வார்டு வணிகர் தெருவில் குடிநீர் தொட்டி அருகில் புதிதாக சிமெண்டு சாலை போடப்பட்டது. ஆனால் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, ஒடுகத்தூர்.