தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-05-14 13:46 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் ஜெய்பீம் தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பலமாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் தெரு பள்ளமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலை பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்தாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்